குடும்பத்தின் தோற்றம் – எங்கெல்ஸ்

குடும்பம், தனிச்சொத்து, அரசு என்ற எங்கெல்சின் நூல். மார்கனின் ஆய்வுகளில் இருந்து மனித குல வளர்ச்சியை காட்டுமிராண்டி காலம், அநாகரிகர் காலம், நாகரிக காலம் என்று பிரிக்கிறார். காட்டு மிராண்டி காலத்தின் கடைக்கட்டம், இடைக்கட்டம், தலைக்கட்டம் அதே போல அநாகரிகர் காலத்தின் கடைக்கட்டம், இடைக்கட்டம், தலைக்கட்டம் ஒவ்வொன்றையும் வர்ணிக்கிறார். இந்த கட்டங்களில் மனிதர்களின் உணவு உற்பத்திக்கான கருவிகள், போர்க்கருவிகள், விலங்குகளை வளர்த்தல், பயிர்த் தொழில் செய்தல் ஆகியவற்றின் அடிப்படையை விளக்குகிறார். காட்டுமிராண்டி காலத்தின் கடைக்கட்டத்தில் மனித மாமிசம் … Continue reading குடும்பத்தின் தோற்றம் – எங்கெல்ஸ்

பிரான்சில் வர்க்கப் போராட்டமும் இன்றைய இந்தியாவும்

பிரான்சில் வர்க்கப் போராட்டம் - மார்க்ஸ் 1849 ஜூனில் லெத்ரு ரொல்லேன் தலைமையிலான குட்டி முதலாளித்துவ கட்சியின் வீழ்ச்சியைப் பற்றி பேசப்படுகிறது. மே மாதம் நடந்த தேர்தலில் நேஷனல் பத்திரிகை குடியரசுவாதிகள் படுதோல்வியை தழுவுகிறார்கள். முறைமை கட்சியினர் பெரும்பான்மையை பெறுகின்றனர். குட்டி முதலாளித்துவ லெத்ரு ரொல்லேன் தலைமையிலான மௌண்டன் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறது. ஆனால், அது ஏற்கனவே தொழிலாளி வர்க்கத்துக்கு 1848 ஜூன் மாதம் துரோகம் இழைத்திருக்கிறது. இப்போது அரசியல் சட்டத்தை காப்பாற்றும் பொறுப்பு … Continue reading பிரான்சில் வர்க்கப் போராட்டமும் இன்றைய இந்தியாவும்

இந்திய சாதி வரலாறு – குறிப்புகள்

ஆரியர்கள் வருகை, அதற்கு முன்பு இங்கு இருந்த பழங்குடிகளை அடக்கி அடிமைப்படுத்தியது, அதற்கு முன்பு இருந்த சிந்து சமவெளி நாகரீகம், சாதி வருணாசிரம கட்டமைப்பை உருவாக்கியது, புத்தரின் எதிர்ப்பு, முகலாயர் படையெடுப்பு, ஐரோப்பியர் வருகை, மூலதனத்தின் ஆட்சி, சாதி முறையில் உடைப்பு, ஐரோப்பிய கல்வி முறை, ரசியப் புரட்சி, தேச விடுதலை போராட்டங்கள், போலி சுதந்திரம், நாடு காலனிய சுரண்டலை தொடர்ந்து எதிர்கொள்வது. மனிதர்கள் வரலாற்றை படைக்கிறார்கள், ஆனால் தமக்குக் கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளின் கீழ்தான் வரலாற்றை படைக்கிறார்கள். … Continue reading இந்திய சாதி வரலாறு – குறிப்புகள்

“கூலியுழைப்பும் மூலதனமும்” – 170 ஆண்டுகள் ஓடி விட்டன

மார்க்ஸ் "கூலியுழைப்பும் மூலதனமும்" நூலை எழுதி 170 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் முதலாளித்தும் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது? மார்க்ஸ்-ன் "மூலதனம்"-ஐத் தொடர்ந்து பாரிஸ் கம்யூன், ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகள் (சமூக ஜனநாயகக் கட்சிகள்) என்று தொழிலாளர் இயக்கம் பீறுநடை போட்டது. 8 மணி நேர வேலை நாள் முதலியவை சாதிக்கப்பட்டன. ரசியாவில் மார்க்சியக் கருத்துக்கள் வேர் பிடித்து ரசிய சமூக ஜனநாயகக் கட்சி வளர்ச்சியடைந்தது. 1905 புரட்சியில் முக்கிய பாத்திரம் வகித்தது. … Continue reading “கூலியுழைப்பும் மூலதனமும்” – 170 ஆண்டுகள் ஓடி விட்டன

இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்

இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் நூலில் 1853-ல் இந்தியாவுக்கான சாசனத்தை புதுப்பிப்பது தொடர்பான கட்டுரை. கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆளும் பொறுப்பில் இருந்தது. அப்போது கூட்டு அமைச்சரவை ஒன்று இருந்தது. இந்தப் பிரச்சனை பற்றி ஆய்வு செய்ய நாடாளுமன்ற குழுக்கள் இரண்டு அமைக்கப்பட்டிருந்தன. இந்திய மாகாணங்கள், மக்கள் கருத்தை அறிவது வரை, கமிட்டி அறிக்கைகள் பெறுவது வரை, இன்னும் தகவல்கள் திரட்டும் வரை முடிவெடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தின. முதலாளிகளின் கூட்டமைப்பான மான்செஸ்டர் கழகம் இந்தியக் கழகம் என்ற … Continue reading இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்

மே 17, 18, 19

10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்களில்தான் முள்ளிவாய்க்கால் போர் முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இலட்சம் பேர் கொல்லப்பட்ட தமிழீழப் போராட்டம் கொடூரமாக முடித்து வைக்கப்பட்டது. இந்தப் பத்து ஆண்டுகளில் இந்தியாவிலும், இலங்கையிலும் முள்வேலி முகாம்கள். பாலச்சந்திரன், இசைப்பிரியா ஆகியோர் கொலை செய்யப்பட்ட படங்கள் வெளியானது, மெரீனாவில் மே 17 இயக்கம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள். தமிழ்நாட்டில் ஈழம் பற்றி பேசும் அமைப்புகளாக சீமானின் நாம் தமிழர், மே 17, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி, … Continue reading மே 17, 18, 19

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை குலைக்கும் குறுங்குழுவாதம்

அகிலத்தில் கற்பனையான பிளவுகள் என்ற தலைப்பில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் 3 “எண்ணக் கோளாறுகளையும், பகைமைகளையும் கொண்ட குறுங்குழுவாத அமைப்புகளுக்கு மாறாக அகிலம், முதலாளிகளுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் எதிராக, அரசு என்ற அமைப்பில் திரட்டப்பட்டிருக்கும் அவர்களுடைய வர்க்க அதிகாரத்துக்கு எதிரான பொதுப் போராட்டத்திற்காக அனைத்து நாட்டு தொழிலாளர்களும் ஒன்றுபட்டுள்ள உண்மையான போர்க்குணமிக்க அமைப்பு ஆகும்.” அதாவது, இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த, அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டிய பொது அமைப்பாக அகிலம் திகழ … Continue reading தொழிலாளி வர்க்க ஒற்றுமையை குலைக்கும் குறுங்குழுவாதம்

தொழிலாளர் அமைப்புகளும், தேசிய (மாநில) கூட்டமைப்புகளும், அகிலமும்

அகிலத்தில் கற்பனையான பிளவுகள் என்ற தலைப்பில் மார்க்ஸ்-எங்கெல்ஸ்  1 இந்தக் கட்டுரை சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் (முதல் அகிலம்) தலைமைக் குழுவுக்காக (General Council) மார்க்ஸ் தயாரித்த இரகசிய சுற்றறிக்கை. இது 1872-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி தலைமைக்குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தலைமைக்குழுவின் ஏகமனதான முடிவின்படி 1872 மே மாதம் இறுதியில் இந்த அறிக்கை பிரெஞ்சு மொழியில் சிறுநூலாக வெளியிடப்பட்டது. அதாவது, 3 மாதங்களுக்குள் இரகசிய அறிக்கையை தொழிலாளர் பெருந்திரளின் பார்வைக்கும், மதிப்பீட்டுக்கும் வெளிப்படையாக வைப்பது … Continue reading தொழிலாளர் அமைப்புகளும், தேசிய (மாநில) கூட்டமைப்புகளும், அகிலமும்

சாதி வர்க்கம் மரபணு – ப கு ராஜன் : ஒரு விமர்சனமும் அதன் மீது ஒரு கருத்தும்

இந்தப் புத்தகம் புதுவிசை இதழில் வெளிவந்த இரண்டு கட்டுரைகளைக் கொண்டுள்ளது. 1. இந்தியச் சமூக கட்டமைப்பும் மரபணுவும். ஆரியர் - திராவிடர் விவாதம் இலக்கியம், தொல்பொருள் ஆய்வு, மொழியியல் என்ற தளத்திலிருந்து தற்போது மரபணு எனும் தளத்தில் நடந்து வருகின்றது. மற்ற எல்லா தளத்திலும் ஆரியர் வந்தேறிகள் அல்ல என வாதிடும் பார்ப்பனக் கூட்டம் தங்களது தரப்பை நியாயப்படுத்த இயலாததன் விளைவாக மரபணு அறிவியலின் மூலம் அதனை நிறுவ முயற்சிக்கின்றன. ஆனால் இதிலும் அவர்கள் (கட்டுரை எழுதப்பட்ட … Continue reading சாதி வர்க்கம் மரபணு – ப கு ராஜன் : ஒரு விமர்சனமும் அதன் மீது ஒரு கருத்தும்

இந்திய சமூகம் பற்றிய ஆய்வு

இந்திய விவசாயம் பற்றிய ஆய்வுப் பணியில் இந்திய விவசாயத்தை மட்டும் தனியாக பரிசீலிக்க முடியாது, இந்தியப் பொருளாதாரத்தில் அன்னிய/உள்நாட்டு கார்ப்பரேட் மூலதனத்தின் ஆதிக்கம் முதன்மையானதாக ஆகியிருக்கிறது. கார்ப்பரேட் ஆதிக்கம் விவசாயத்தில் செலுத்தும் தாக்கத்தை பற்றி ஓரளவு தகவல்களை தொகுத்தோம். ஆனால், கார்ப்பரேட் ஆதிக்கம் எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்வதற்கு அது பொருளாதாரத்தின் பிற துறைகளில் எப்படி செயல்படுகிறது என்பதையும் சேர்த்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. மேலும் மூலதனம் தேச எல்லைகளை தாண்டி பாயும் நிலையில் சர்வதேச அளவில் … Continue reading இந்திய சமூகம் பற்றிய ஆய்வு