மூலதனம் – 2ம் பாகம்

மூலதனம் இரண்டாவது பாகம் வாசிக்கும் போதுதான் முதல் பாகத்தின் பின்னால் இருக்கும் உழைப்பு தெரிகிறது. இதை ஏன் முடிக்கவில்லை என்பதற்கான காரணமும் தெரிகிறது. நுண்கணிதம் வருகிறது, iterative கணக்கிடுதல் வருகிறது, அணிகள் வருகின்றன, இந்த கணித தர்க்கம் அனைத்தையும் குறியீடுகள் இல்லாமல் சாதாரண மனித மொழியில் விளக்க முயற்சிக்கிறார் மார்க்ஸ். இதில் மூலதனத்தின் உருமாற்றங்கள் பற்றியும் அதன் மூன்று சுற்றுகள் பற்றியும் விளக்குகிறார். ஒரு சரக்கின் சுற்று என்பது பணம் - சரக்கு - பணம் இல்லை … Continue reading மூலதனம் – 2ம் பாகம்

விஞ்ஞான யதார்த்தவாதம்

ஜெயராமனின் கட்டுரைகள். முதல் கட்டுரையில் நேர்மறைவாதம் - positivism, realism – யதார்த்தவாதம், obscurantism – அறிவுமறுப்பு வாதம், logical empiricism, critical realism, logical positivism, Kuhn-ன் அறிவியல் புரட்சிகளின் கட்டமைப்பு, social externalism, social constructivism ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறார். இயக்கவியல் பொருள்முதல்வாதம் விஞ்ஞான யதார்த்த வாதத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்கிறார். அந்த கருதுகோள் தவறானது. இயக்கவியல் பொருள்முதல்வாதம் அறிவியலில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னால் சரியானது. இதற்கு முன்பும் ரியலிசம் பற்றி, … Continue reading விஞ்ஞான யதார்த்தவாதம்

ஏகாதிபத்தியம் பற்றி

1. முதலாளித்துவத்தின் உச்சக் கட்டமாகிய ஏகாதிபத்தியத்தில் போட்டியும் சரக்கு பரிவர்த்தனையும் கூலி உழைப்பும், உபரி-மதிப்பின் உற்பத்தியும், உபரி-மதிப்பு முதலாளிகளிடையே பங்கிடப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. “உண்மையில், ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தை மேலிருந்து கீழ் வரை உருமாற்றி விடுவதில்லை, அப்படி உருமாற்றவும் முடியாது. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை சிக்கலாக்கி கூர்மையானவை ஆக்குகிறது. அது ஏகபோகத்தை சுதந்திர போட்டியுடன் இணைக்கிறது, ஆனால் அது பரிவர்த்தனையையும் சந்தையையும், போட்டியையும், நெருக்கடிகளையும் ஒழித்து விட முடியாது. ஏகாதிபத்தியம் என்பது அழுகிக் கொண்டிருக்கும் முதலாளித்துவம், செத்துக் கொண்டிருக்கும் … Continue reading ஏகாதிபத்தியம் பற்றி

ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சகட்டம்

"ஐரோப்பாவில் புதிய முதலாளித்துவம் [ஏகாதிபத்தியம்] பழைய முதலாளித்துவத்தை திட்டவட்டமாக அகற்றிவிட்ட காலம்... இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமாகும்" 1. தொழில்துறையில் ஏகபோகங்கள் "விற்பனையில் நிபந்தனைகள், பணம் செலுத்துவதற்கான கெடுக்கள் முதலியவை பற்றி கார்ட்டல்கள் ஒப்பந்தத்திற்கு வருகின்றன. சந்தைகளை தங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்கின்றன. உற்பத்தி செய்யப்பட வேண்டிய பண்டங்களின் அளவை நிர்ணயிக்கின்றன. விலைகளை நிர்ணயிக்கின்றன. பற்பல தொழில் நிலையங்களுக்கிடையில் லாபங்களைப் பிரித்துக் கொள்கின்றன.” (பக்கம் 33) “போட்டியானது ஏகபோகமாக மாற்றமடைந்து வருகிறது. உற்பத்தியின் சமூகமயமாக்கம் இதன் விளைவாகப் பிரமாதமாக முன்னேறியுள்ளது. … Continue reading ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சகட்டம்

நவீன முதலாளித்துவ பொருளாதாரம்

பயன்-மதிப்பு - தனி நபருக்கோ, சமூகத்துக்கோ பலனளிக்கக் கூடிய பொருள் அல்லது சேவை. தனிநபருக்கு பலனளிப்பதாக இருப்பது சமூகத்துக்கு கேடானதாகவோ அல்லது தனிநபருக்கு கேடானது சமூகத்துக்கு பலனளிப்பதாகவோ கூட இருக்கலாம். இலவசமாக எதுவும் இல்லை என்ற கோட்பாடு - நாம் சுவாசிக்கும் காற்று இலவசமாக, எந்த விலையும் கொடுக்காமல் கிடைக்கிறது. அதன் பயன்-மதிப்பு நிறைய இருக்கிறது. அதே காற்றை ஒரு பாட்டிலில் பிடித்து ஆக்சிஜன் பார்லர் என்ற பெயரில் சுவாசிக்கக் கொடுத்தால், அந்த பாட்டிலைச் செய்ய, ஆக்சிஜனை … Continue reading நவீன முதலாளித்துவ பொருளாதாரம்

2020-ன் புதிய விடியல் கொடுங்கனவாக…

2020-ம் ஆண்டு மிக மோசமாக அடித்துத் துவைக்கிறது. ஜனவரி மாதத்தில் இருந்தே சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்தன. பிப்ரவரி 10ம் தேதி வரை டெல்லி தேர்தல் பிரச்சாரம், அது தொடர்பான நாடகங்கள். பிப்ரவரி கடைசி வாரத்தில் டெல்லியில் வன்முறை வெறியாட்டம், அது தொடர்பான பிரச்சாரங்கள், முன்னெடுப்புகள். ஜனவரி இறுதியிலிருந்தே கொரோனா வைரஸ் பீதி சீனாவில் பரவி விட்டது. சீன அரசு வூகான் நகரத்தையும், ஹூபெய் மாகாணத்தையும் மூடி ஒட்டு மொத்த முயற்சிகளையும் அங்கு குவித்தது. இரண்டு மாதங்களுக்குள் … Continue reading 2020-ன் புதிய விடியல் கொடுங்கனவாக…

குடும்பத்தின் தோற்றம் – எங்கெல்ஸ்

குடும்பம், தனிச்சொத்து, அரசு என்ற எங்கெல்சின் நூல். மார்கனின் ஆய்வுகளில் இருந்து மனித குல வளர்ச்சியை காட்டுமிராண்டி காலம், அநாகரிகர் காலம், நாகரிக காலம் என்று பிரிக்கிறார். காட்டு மிராண்டி காலத்தின் கடைக்கட்டம், இடைக்கட்டம், தலைக்கட்டம் அதே போல அநாகரிகர் காலத்தின் கடைக்கட்டம், இடைக்கட்டம், தலைக்கட்டம் ஒவ்வொன்றையும் வர்ணிக்கிறார். இந்த கட்டங்களில் மனிதர்களின் உணவு உற்பத்திக்கான கருவிகள், போர்க்கருவிகள், விலங்குகளை வளர்த்தல், பயிர்த் தொழில் செய்தல் ஆகியவற்றின் அடிப்படையை விளக்குகிறார். காட்டுமிராண்டி காலத்தின் கடைக்கட்டத்தில் மனித மாமிசம் … Continue reading குடும்பத்தின் தோற்றம் – எங்கெல்ஸ்

மூலதனத்தின் திரட்சி – ரோசா லக்சம்பர்க்

லக்சம்பர்க் ஒரு கோட்பாட்டு பகுப்பாய்வை அதன் சூக்கும வடிவில் அப்படியே பருண்மையான யதார்த்தத்துக்கு பொருத்த முயற்சிப்பது அடிப்படையான பிரச்சனை. சூக்கும கருத்துருவுடன் படிப்படியாக சிக்கல்களை ஒவ்வொன்றாக சேர்ப்பதன் மூலம் பருண்மையான சிக்கலான யதார்த்தத்தை வந்தடைய வேண்டியிருக்கிறது. தனது விமர்சர்களை எப்படி குற்றம் சாட்டுகிறாரோ அதே போலவே லக்சம்பர்கும் கணிதவியல் மாதிரிகளில் சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து நேரடியாக பருண்மையான யதார்த்தத்துக்கு தாவி விடுகிறார். பாலும், அரிசியும் தனித்தனியே நிற்கும் பால் பாயாசம் போல ஆகி விடுகிறது. மேலும், அவரது … Continue reading மூலதனத்தின் திரட்சி – ரோசா லக்சம்பர்க்

மூலதனத்திரட்சியும் ஏகாதிபத்தியமும் – லக்சம்பர்க், புகாரின்

ஏகாதிபத்தியமும் மூலதனக் குவிப்பும் என்ற நூல். அதில் ரோசா லக்சம்பர்க் தனது "மூலதனக் குவிப்பு" என்ற நூலின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு அளித்த பதிலும், புகாரின் ரோசா லக்சம்பர்கின் கோட்பாட்டை மறுதலித்த நூலும் உள்ளன. இரண்டுமே 1972ல் வெளியிடப்பட்டிருக்கின்றன. மன்த்லி ரிவியூ அச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதில் 1. முன்னுரை 2. மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு 3. வாழ்க்கைக் குறிப்புகள் ரோசா லக்சம்பர்க் (1871-1919) நிகோலாய் இவானோவிச் புகாரின் (1888-1938) 4. ஆசிரியரின் அறிமுகம் மூலதனக் குவிப்பு - விமர்சன … Continue reading மூலதனத்திரட்சியும் ஏகாதிபத்தியமும் – லக்சம்பர்க், புகாரின்

லெனின் தொகுதி நூல்கள் – 1 விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றங்கள்

1. “விவசாயிகளின் வாழ்வில் புதிய பொருளாதார முன்னேற்றங்கள் (தென் ரசியாவில் விவசாய பயிரிடுதல் என்ற வி.ஒய்.போஸ்ட்னிகோவின் புத்தகம் பற்றி) 2. சந்தைப் பிரச்சனை என்று சொல்லப்படுவது பற்றி 3. “மக்களின் நண்பர்கள்" எனப்படுபவர்கள் யார்? அவர்கள் சமூக ஜனநாயகவாதிகளை எப்படி எதிர்க்கிறார்கள்? (மார்க்சிஸ்டுகளை எதிர்த்து ருஸ்கோயே போகாட்ஸ்ட்வோ இதழில் வெளியான கட்டுரைகளுக்கு ஒரு பதில்) 4. நரோத்னியத்தின் பொருளாதார உள்ளடக்கமும் திரு ஸ்த்ரூவேயின் புத்தகத்தில் அது பற்றி விமர்சனமும் (முதலாளித்துவ இலக்கியத்தில் மார்க்சியத்தின் பிரதிபலிப்பு). பி.ஸ்த்ரூவே. ரசியாவின் … Continue reading லெனின் தொகுதி நூல்கள் – 1 விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றங்கள்