தகவல் மூலதனம்

1. விவசாயம் (பிரித்தெடுத்தல் - சுரங்கம், மீன்பிடித்தல், மரம் வெட்டுதல் போன்றவை, பயிரிடுதல், கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்றவை), தொழில் (கட்டுமானம், பொருள் உற்பத்தி உள்ளிட்டு), சேவை (தனிமனிதருக்கு - கல்வி, கேளிக்கை உள்ளிட்ட மூளைக்கு உரமூட்டுபவை, மருத்துவம், முடி வெட்டுதல், மசாஜ் போன்ற உடலுக்கு சேவை, சமூகத்துக்கு - துப்புரவு, மின்சாரம், போக்குவரத்து, அரசு நிர்வாகம், சட்ட ஒழுங்கு, நீதித்துறை, ராணுவம், நாணய நிர்வாகம்) - உற்பத்தியின் மூன்று பெரும் துறைகள் - இவற்றுக்கு … Continue reading தகவல் மூலதனம்

தகவலியல் பொருளாதாரம்

The Rise of the Networked Society by Manuel Castells 1970-களில் கணினி, நெட்வொர்க்கிங், தொலை தொடர்பு, ஃபைபர் ஆப்டிக், மைக்ரோ சிப், மினி கம்ப்யூட்டர், ஆகிய நுட்பங்களில் ஒரு உடைப்பு ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்த மூன்றின் இணைப்பு - கணினி, நெட்வொர்க்கிங், தொலைதொடர்பு எல்லா துறைகளிலும் மாபெரும் புரட்சியை ஏற்படுத்துகிறது. தகவலை பெருமளவில் கையாள்வது, அனுப்புவது ஆகியவற்றின் மூலமாக உற்பத்தி, வர்த்தகம், நுகர்வு, வினியோகம் மட்டுமின்றி இந்த தகவல்களை கையாளும் தொழில்நுட்பமும் பிரம்மாண்டமாக … Continue reading தகவலியல் பொருளாதாரம்

தொழில்துறைக்குப் பிந்தைய சமூகம்

வரப் போகும் தொழில்துறைக்குப் பிந்தைய சமூகம் என்ற தலைப்பில் டேனியல் பெல் எழுதிய புத்தகம். 1973-ல் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார். (அப்போதுதான் புத்தகம் வெளியாகியுள்ளது). 1976-ல் ஒரு அறிமுகம் எழுதியிருக்கிறார். 1999-ல் ஒரு அறிமுகம் எழுதியிருக்கிறார். தொழில்துறை சமூகத்திலிருந்து தொழில்துறைக்குப் பிந்தைய சமூகத்தை நோக்கி - சமூக வளர்ச்சி பற்றிய கோட்பாடுகள் பொருட்களிலிருந்து சேவைகளுக்கு : பொருளாதாரத்தின் மாறிவரும் உருவம் அறிவு, தொழில்நுட்பம் ஆகியவற்றின் பரிமாணங்கள் : தொழில்துறைக்குப் பிந்தைய சமூகத்தில் புதிய வர்க்க கட்டமைவு கார்ப்பரேஷனை … Continue reading தொழில்துறைக்குப் பிந்தைய சமூகம்

தகவல் புரட்சி பற்றி

தகவல் புரட்சி பொருளுற்பத்தியின் மீது என்ன தாக்கம் செலுத்துகிறது என்பது அடிப்படையாக இருக்க வேண்டும். தொழிற்புரட்சி நேரடியாக பொருள் உற்பத்தித் துறையினுள் பயன்படுத்தப்பட்டது. மற்ற எல்லா துறைகளும், தகவல் துறை, சேவைத் துறை இவை பொருளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. பொருள் உற்பத்தியுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன. பொருளுற்பத்தித் துறையில் இலக்குப் பொருள் மீது கருவிகளைப் பயன்படுத்தி உழைப்பு செலுத்தி மாற்றியமைக்கப்பட்டு உற்பத்திப் பொருள் உருவாக்கப்படுகிறது. இலக்குப் பொருள் உழைப்பை உறிஞ்சி உற்பத்திப் பொருளின் மதிப்புக்கான ஆதாரமாக ஆக்குகிறது. மதிப்பு … Continue reading தகவல் புரட்சி பற்றி

பயன்-மதிப்பு, மதிப்பு, உபரி-மதிப்பு

பயன்-மதிப்பு மட்டுமில்லை, மதிப்பை, மதிப்பை மட்டுமில்லை உபரி-மதிப்பை உற்பத்தி செய்கிறது முதலாளித்துவ உற்பத்தி. சரக்கு உற்பத்தி பயன்-மதிப்புடன் பரிவர்த்தனை-மதிப்பை உற்பத்தி செய்யும் நிகழ்முறை. இவற்றுடன் உபரி-மதிப்பை உற்பத்தி செய்யும் நிகழ்முறை முதலாளித்துவ உற்பத்தி. சரக்கு பணமாக மாறியதன் மூலம் பணம் மூலதனமாக உருமாற்றம் அடைய முடிகிறது.

கடந்த 20 ஆண்டுகளும், 19-ம் நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகளும்

கடந்த 20 ஆண்டுகளில் உலக அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை தொகுக்க வேண்டும். ஏகாதிபத்தியம் 1870-களில் தொடங்கி 1900-க்கு முன்பு ஒரு நடைமுறை யதார்த்தமாகி விட்டது போல தகவல் புரட்சி 1970-களில் தொடங்கி 2000-க்கு முன்பு ஒரு நடைமுறை யதார்த்தமாகி விட்டது. எனவே, முன்னணி முதலாளித்துவ நாடுகளிலும், இந்தியாவிலும், சீனாவிலும் பொருளாதாரங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுக்க வேண்டும். தரவுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக தொகுக்காமல் எல்லா நாடுகளின் எல்லா அம்சங்களையும் பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டும். … Continue reading கடந்த 20 ஆண்டுகளும், 19-ம் நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகளும்

தொழில்துறையும் தகவல்துறையும்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மூலதனம் நூல், ரசியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி, ரசியப் புரட்சி தொடர்பான நூல்கள், அரசும் புரட்சியும் என ஏகாதிபத்தியம் நூலில் முடிவது வரையிலான கோட்பாட்டுப் பணி தொழில்துறை முதலாளித்துவத்தை மையப்படுத்தியது. தொழில் புரட்சியின் குழந்தையான தொழில்துறை முதலாளித்துவம் 19-ம் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டின் முதல் 70 ஆண்டுகளிலும் ஆதிக்கம் செலுத்தியது. அதன் மடியில் பிறந்து வளர்ந்தது தகவல் துறை முதலாளித்துவம். தொழில்துறை முதலாளித்துவத்தின் முன்னோடியாக கைவினைத் தொழில், பட்டறைத் தொழில் இருந்தது போல தகவல் … Continue reading தொழில்துறையும் தகவல்துறையும்

நாட்டுப்புற ஏழை மக்களுக்கு, பிரான்சில் வர்க்கப் போராட்டம், குருண்ட்ரிச

நாட்டுப்புற ஏழை மக்களுக்கு - லெனின் கிராமப் புறத்தில் உள்ள விவசாயிகளை குதிரைகளை சொந்தமாக வைத்திருப்பதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறார். 1 கோடி விவசாயிகளில் சுமார் 30 லட்சம் பேருக்கு ஒரு குதிரை கூட சொந்தமாக இல்லை, சுமார் 35 லட்சம் பேரிடம் ஒரு குதிரை மட்டுமே உள்ளது. மொத்தம் உள்ள ஒன்றரை கோடி குதிரைகளில் பெரும்பான்மை பணக்கார விவசாயிகள் சிறுபான்மையிடம்தான் இருக்கின்றன. எனவே பணக்கார விவசாயிகள் பாரம்பரிய நிலப்பிரபுக்களைப் போல கூலிக்கு ஆள் வைத்துக் கொள்கின்றனர். விவசாயம் … Continue reading நாட்டுப்புற ஏழை மக்களுக்கு, பிரான்சில் வர்க்கப் போராட்டம், குருண்ட்ரிச

தொழில் புரட்சியும் தகவல் புரட்சியும்

1700-களின் இரண்டாவது பாதியில் நடைபெற்ற தொழில் புரட்சியைப் போன்றது, 20-ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் நடைபெற்ற தகவல் புரட்சி. அந்தப் புரட்சியின் குழந்தைகளாக வளர்ந்து, அதில் திளைத்துக் கொண்டிருக்கும் தலைமுறை முந்தைய தலைமுறையின் சிந்தனையில் இருந்து பண்பு ரீதியாகவே வேறுபட்டவர்கள். விக்கிபீடியாவின் படி தொழிற்புரட்சி என்பது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 1760-களில்ஆ ரம்பித்து 1820-கள் 1840-கள் வரை நீடித்த காலகட்டம். கைவினை உற்பத்தியிலிருந்து எந்திரங்களுக்கு மாறிச் செல்வது, இரசாயனங்களின் உற்பத்தி, இரும்பு உற்பத்தி நிகழ்முறைகள், நீராவி சக்தியை பயன்படுத்துவது, … Continue reading தொழில் புரட்சியும் தகவல் புரட்சியும்

பிரான்சில் வர்க்கப் போராட்டமும் இன்றைய இந்தியாவும்

பிரான்சில் வர்க்கப் போராட்டம் - மார்க்ஸ் 1849 ஜூனில் லெத்ரு ரொல்லேன் தலைமையிலான குட்டி முதலாளித்துவ கட்சியின் வீழ்ச்சியைப் பற்றி பேசப்படுகிறது. மே மாதம் நடந்த தேர்தலில் நேஷனல் பத்திரிகை குடியரசுவாதிகள் படுதோல்வியை தழுவுகிறார்கள். முறைமை கட்சியினர் பெரும்பான்மையை பெறுகின்றனர். குட்டி முதலாளித்துவ லெத்ரு ரொல்லேன் தலைமையிலான மௌண்டன் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறது. ஆனால், அது ஏற்கனவே தொழிலாளி வர்க்கத்துக்கு 1848 ஜூன் மாதம் துரோகம் இழைத்திருக்கிறது. இப்போது அரசியல் சட்டத்தை காப்பாற்றும் பொறுப்பு … Continue reading பிரான்சில் வர்க்கப் போராட்டமும் இன்றைய இந்தியாவும்