மூலதனத்தின் திரட்சி – ரோசா லக்சம்பர்க்

க்சம்பர்க் ஒரு கோட்பாட்டு பகுப்பாய்வை அதன் சூக்கும வடிவில் அப்படியே பருண்மையான யதார்த்தத்துக்கு பொருத்த முயற்சிப்பது அடிப்படையான பிரச்சனை. சூக்கும கருத்துருவுடன் படிப்படியாக சிக்கல்களை ஒவ்வொன்றாக சேர்ப்பதன் மூலம் பருண்மையான சிக்கலான யதார்த்தத்தை வந்தடைய வேண்டியிருக்கிறது. தனது விமர்சர்களை எப்படி குற்றம் சாட்டுகிறாரோ அதே போலவே லக்சம்பர்கும் கணிதவியல் மாதிரிகளில் சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து நேரடியாக பருண்மையான யதார்த்தத்துக்கு தாவி விடுகிறார். பாலும், அரிசியும் தனித்தனியே நிற்கும் பால் பாயாசம் போல ஆகி விடுகிறது.

மேலும், அவரது அரிசி சரியாக வேகவில்லை. குறிப்பாக மதிப்பு, பணம் பற்றிய மேம்போக்கான புரிதலில் உள்ளார். பணம் என்பது மதிப்பின் எனவே சமூகரீதியான மனித உழைப்பின் சர்வப் பொதுச் சமதை வடிவம் என்பதிலிருந்து விலகி இருந்து பேசுகிறார். பணத்தை பளபளக்கும் தங்கமாக மட்டுமே பார்க்கிறார்.

பக்கம் 51-ல் உற்பத்தியில் பயன்-மதிப்புகளுக்கும் மதிப்புக்கும் இடையேயான உறவை தெளிவின்றி பேசுகிறார்.

‘The exchange of commodities on the market is an internal or family matter between capitalists. The required money for this process, of course, comes out of the capitalists’ pockets – as every employer must lay out the money capital in advance – and returns into the pockets of the capitalist class after the exchange on the market has taken place”

இங்கு அவர் பணத்தின் செயல்துடிப்பான பாத்திரத்தையும், அரசையும், பொதுக் கடன்களையும் மறந்து விடுகிறார். அவற்றை சேர்க்கமால் விடுகிறார்.

முதலாளித்துவ உற்பத்தியில் புதிய வேண்டல், மனித குலத்தின் அதிகரித்துக் கொண்டே போகும் தேவைகளிலிருந்து தோன்றுகிறது. அதற்கான உந்துத்தல் முதலாளித்துவ கடன் முறையிலிருந்தும் பொதுக் கடனிலிருந்தும் கிடைக்கிறது. எனவே, புதிய இது வரை இல்லாத தேவைகளை எதிர்நோக்கி மூலதனம் புதிய தொழில்நுட்பங்களில் பாய்கிறது. மூன்றாவது சந்தைகள், படையெடுப்பு, சிறு உற்பத்தியை அளித்தல் போன்றவை எல்லாவற்றுடனும் கூடவே இந்த தொழில்நுட்ப உந்துத்தல் முக்கியமான காரணியாக உள்ளது.

ரோசா லக்சம்பர்க் மூலதனத் திரட்சி பற்றிய தனது கோட்பாட்டில் பல விஷயங்களை அடுத்து நகர்த்துகிறார். பணம் பற்றிய சாராம்சத்தை உள்வாங்கிக் கொள்ளவில்லை.

மூலதனம் நூலின் முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் மூன்றாம் பாகத்துக்கும் இடையே ஒரு செயற்கையான பிரிவினையை உருவாக்கிக் கொள்கிறார். மார்க்ஸ் இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பையும் அதன் முழுமையிலிருந்து, அதன் இயக்கத்திலேயே பார்க்கிறார். அதை முன் வைக்கிறார். முதல் பாகத்திலும் இரண்டாம் பாகத்தில் பேசப்படும் விஷயங்களும், மூன்றாம் பாகத்தில் பேசப்படும் விஷயங்களும் மார்க்சின் சிந்தனையில் உள்ளன. எனவே, இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொண்டு அது மூன்றாம் பாகத்துக்கு முரணாக இருக்கிறது. இதை வளர்த்துச் சென்றால் மூன்றாம் பாகம் இல்லாமல் போய் விடும் என்று பேசுவது எல்லாம் அர்த்தமற்றது.

சமூகத் தேவைகள்தான் உற்பத்தியை செலுத்துகின்றன. மனிதனின் சமூக தேவைகள் வளர்ந்து கொண்டே போகின்றன என்பது ஜெர்மானிய சித்தாந்தத்தில் மார்க்சின் அடிப்படையான கருதுகோள்களில் ஒன்று. அதை லக்சம்பர்க் புறக்கணிக்கிறார். வெளிநாட்டுச் சந்தை, முதலாளித்துவம் அல்லாத உற்பத்தி முறைகளுடன் உறவாடல் இவற்றுடன் புதிய தேவைகள், கடன் செலாவணி முறை, பொதுக்கடன்கள் இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட மூலதனம் ஒரு வடிவம் மட்டும்தான் ஒட்டு மொத்த சமூக மூலதனம்தான் யதார்த்தம் என்கிறார். அது தவறானது. முழுமைக்கும் பகுதிக்கும் இடையேயான உறவை உள்ளடக்கத்துக்கும் வடிவத்துக்கும் இடையேயான உறவாக மாற்றிச் சொல்கிறார்.

under consumption கோட்பாட்டைத்தான் இன்னும் நுணுக்கமான வடிவில், சொல்லப் போனால் ஒரு வகையில் ஹீலர் பாஸ்கர் பாணியில் சொல்கிறார். அதன் பிறகு தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலளிக்கத் தொடங்குகிறார்.

‘மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தைப் பற்றி எழுதுகிறார். அப்படி எந்த சமூகமும் இருந்ததில்லை’ என்கிறார்.

பிற சந்தைகளை எடுத்துக் கொள்ளும் லக்சம்பர்க், அரசு, பொதுக்கடன், கடன் செலாவணி முறையை விட்டு விடுகிறார். எனவே நிதி மூலதனம் அவரது பகுப்பாய்வுக்குள் வரவில்லை.

அதன் பிறகு பக்கம் 71-ல் சரக்கை பணமாக மாற்ற வேண்டும், பணம் எங்கிருந்து வருகிறது என்று திரும்பி விடுகிறார். doctrine of average profit என்று ஒன்றை பேசுகிறார். இது என்ன அபத்தம். அது ஒரு போக்கு என்றுதான் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

Leave a comment