இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்

ந்தியாவைப் பற்றி மார்க்ஸ் நூலில் 1853-ல் இந்தியாவுக்கான சாசனத்தை புதுப்பிப்பது தொடர்பான கட்டுரை.

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆளும் பொறுப்பில் இருந்தது. அப்போது கூட்டு அமைச்சரவை ஒன்று இருந்தது. இந்தப் பிரச்சனை பற்றி ஆய்வு செய்ய நாடாளுமன்ற குழுக்கள் இரண்டு அமைக்கப்பட்டிருந்தன. இந்திய மாகாணங்கள், மக்கள் கருத்தை அறிவது வரை, கமிட்டி அறிக்கைகள் பெறுவது வரை, இன்னும் தகவல்கள் திரட்டும் வரை முடிவெடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தின. முதலாளிகளின் கூட்டமைப்பான மான்செஸ்டர் கழகம் இந்தியக் கழகம் என்ற ஒன்றை ஏற்படுத்தி தமது நலனுக்காக வாதிட்டது. அரசோ, இங்கிலாந்தில் ஆட்சியை இழந்தாலும், அடுத்த 20 ஆண்டுகளுக்கு தமது சுரண்டலை உறுதி செய்வதற்கான முயற்சியை செய்கின்றனர்.

அதற்காக விக் கட்சி நிர்வாகியாகவும் இப்போது கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும் இருப்பவரை நியமித்தனர். 15 கோடி மக்களை ஆள்வதற்கான சட்ட மசோதா இந்த வழியில்தான் விவாதிக்கப்பட்டு வந்தது.

அடுத்த கட்டுரை, சீன, ஐரோப்பிய புரட்சிகள் என்ற தலைப்பில். சீனாவில் நடக்கும் மக்கள் கிளர்ச்சிகள் ஐரோப்பாவின் அடுத்த குடியரசுக்கான எழுச்சியை தீர்மானிக்கும் என்று குறிப்பிடுகிறார். சீனாவில் தாய்பிங் எழுச்சி, அதை அன்னியப் படைகளின் உதவியுடன் சீன அரசு ஒடுக்கியது என்று போகிறது.

Leave a comment